நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம், ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தற்போது உலக நாயகன் கமல் ஹாஸன், ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாப்பிள்ளையின் பெயர் கெளதம் என்றும் அவர் ஒரு தொழிலதிபர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.