லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் தனது சொந்த குரலில் பாடி, ‘ஒரு குட்டி ஸ்டோரி’ எனும் பாடல் வெளிவந்திருந்தது. இப்பாடல் தமிழில் மட்டுமல்லாமல் உலகளவில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்டாக புதிய புகைப்படம் ஓன்று கசிந்துள்ளது.

இதில் விஜய் மற்றும் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா அறியோர் தெரிகின்றனர். மேலும் ஒரு குட்டி ஸ்டோரி பாடலில் இடம் பெற்ற அந்த நீல நிற காரும் இதில் தெரிகிறது. இந்த புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…