சிவகார்த்திகேயனுக்கென ஒரு தனி மார்க்கெட் சினிமாவில் உண்டு. அவரின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நியாயமான லாபம் தருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

Namma Veettu Pillai

பாண்டி ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் சிவா நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. ஏற்கனவே அவர் பலருக்கும் செல்லப்பிள்ளை தான்.

தற்போது இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் நம்ம வீட்டுப்பிள்ளையாக மாறியுள்ளார். குடும்ப கதையாக அமைந்துள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரளாவிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இதன் வசூல் விவரங்கள் இதோ…

  • வெள்ளி – ரூ 21 லட்சம்
  • சனி – ரூ 19 லட்சம்
  • ஞாயிறு – ரூ 22 லட்சம்

மொத்தம் – ரூ 62 லட்சம்