நடிகர் விஜய்சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர, ’இயற்கை’, ’ஈ’, ’பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜெனன்நாதனுடன் ’லாபம்’, காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனுடன் ’கடைசி விவசாயி’, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ’துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களிலும் பிசியாக உள்ளார்.இந்நிலையில் அவர் மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ’காத்து வாக்குல 2 காதல்’ என்று 2 டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயந்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க உள்ளது.