அஜித் தமிழ் சினிமாவில் தனி பாதையில் பயணிக்கும் ஒருவர். விழாக்களுக்கு வர மாட்டார், பட நிகழ்ச்சிக்கு வருவரு கிடையாது, ரசிகர்களை தனியே சந்திப்பதும் கிடையாது.

nerkondaparvai 100 Days

இப்படி அவர் இருந்தாலும் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லை. இவர் தன்னுடைய 60வது படத்தில் கமிட்டாகியுள்ளார், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்கு நடுவில் ரசிகர்கள் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். No Means No என்று கூறி அந்த வார்த்தைக்கும், பெண்களுக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார் நேர்கொண்ட பார்வை படம் மூலம்.

பெரிய இடத்தில் இருக்கும் நடிகர்கள் இப்படிபட்ட கதையில் நடிக்க கொஞ்சம் தயங்கும் போது அஜித் அந்த கதையில் வெற்றியும் கண்டுள்ளார்.

படம் வெளியாகி இன்றோடு 100வது நாள், இதனால் No Means No என்ற முக்கிய வார்த்தையுடன் #100DaysOfGenuineHitNKP என்ற டாக்கை கிரியேட் செய்து ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.