ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்பட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் கருப்பி என்றொரு நாயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது

இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார்.

கயல் ஆனந்தி பேசுகையில், இந்த படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தபோது, ஒரு காதல் காட்சியைப்பற்றி மட்டும் தான் சொன்னார் இயக்குனர். அதுவே என்னை கவர்ந்ததால் மேற்கொண்டு கதையை கேட்காமல் நடித்தேன்.

கதையும், கதாபாத்திரங்களும் இயல்பாக தெரிந்தது. எனக்கான கேரக்டரை நான் முழுமையாக உள்வாங்கி நடித்தேன். நான் இதுவரை நடித்ததில் ரொம்ப திருப்திகரமான வேடம். இப்படம் எனது கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும்.

டைரக்டர்கள் ராம், பா.ரஞ்சித் இயக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் தயாப்பில் நடித்து விட்டேன். அடுத்து அவர் இயக்கும் படத்திலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் ஆனந்தி.