இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ மற்றும் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதியும் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் 16ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பின்படி நேற்று ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்த நிலையில் தனுஷின் ’பட்டாஸ்’ திரைப்படத்தை வரும் 16ஆம் தேதி தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்ப அதிர்ச்சியாக ஒருநாள் முன்கூட்டியே அந்த படம் வெளியாக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆம் ஜனவரி 15ஆம் தேதி பட்டாஸ் திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாஸ் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது