இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார்.

 

டில்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கும், பின்னணி பாடகர் யேசுதாசுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். பின்னர் தேசிய விருது பெற்றவர்களுடன் ஜனாதிபதி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

சிலருக்கு மட்டும் ஜனாதிபதி விருது அளிக்க, மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கினார். ஜனாதிபதி விருதை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுக்கு தேர்வான 63 பேர் விழாவை புறக்கணித்தனர்.