தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் அடங்கும்.
அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விழாவிற்கு விஜய் சேதுபதி தாமதமாக வந்ததால் தரவில்லை என்று கூறப்பட்டது. விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.\

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான படம் சங்கத் தமிழன்.

படம் எப்போதோ தயாராகிவிட்டாலும் ரிலீஸ் தேதிக்காக பல பிரச்சனைகளை சந்தித்தது. நேற்று வெளியாவதாக இருந்த இப்படம் பிரச்சனையில் சிக்க விஷாலின் ஆக்ஷன் படம் மட்டும் ரிலீஸ் ஆனது.

பின் எப்படியோ சங்கத் தமிழன் படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று போராடி நேற்று இரவு படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர்.