சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தின் சூப்பர் அப்டேட்!

சந்தானம் நடித்த ’பாரிஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான ’டிக்கிலோனா’ படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது

மூன்று வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தின் புதிய அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த படத்தில் இடம்பெற்ற ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ரீமிக்ஸ் பாடலான ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி பாடிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதே பாடல் ரீமிக்ஸில் டிக்கிலோனா படத்திலும் இடம் பெற்றிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

santhanam-in-dikkilona-first-single-song-released-on-tomorrow

Vijay Antony Love Melody Hits Songs