முடங்கி இருக்கும் படத்தை தூசு தட்டும் சந்தானம்

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு ஆனபின் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் ஒன்று ’மன்னவன் வந்தானடி’. பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆனால் திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு அதற்கு மேல் தொடரவில்லை. இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் மீதி உள்ள 20% படப்பிடிப்பை தொடங்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Mannavan Vanthanadi,Selvaraghavan featuring Santhanam and Aaditi Pohankar,Yuvan Shankar Raja,

இந்த படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என சந்தானமும் கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் 20 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். எனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம், ஆதித்தி போங்கர், ஆடுகளம் நரேன், அருள்தாஸ், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லோகநாதன் ஸ்ரீனிஆசன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.