ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்

4 தேசிய விருதுகளைப் பெற்று பல மொழிகளிலும் தன்னுடைய இன்னிசை குரலை, பாடல் மூலம் தெளித்து வரும் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறி இருக்கிறார். அதில் “குட்டி ஸ்ரேயா ஆதித்யா” வரப்போகிறது எனக் குறிப்பிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை அவர் தெரியப்படுத்தி உள்ளார். இந்தப் பதிவு தற்போது லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று பல வாழ்த்துகளையும் குவித்து வருகிறது.

பாடகி ஸ்ரேயா கோஷல் தன்னுடைய 16 ஆவது வயதில், (2000) ஜி தொலைக்காட்சியில் நடைபெற்ற “சரிகம“ பாட்டு போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். அந்நிகழ்ச்சிக்கு வந்து இருந்த பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தன்னுடைய வசீகரக் குரலால் ஸ்ரேயா ஈர்த்து விட்டார். அதனால் சஞ்சய் தன்னுடைய அடுத்த படமான “தேவதாஸ்“ படத்தின் 5 பாடல்களை 16 வயதே ஆன சிறுமிக்கு வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா, மாதுரி தீட்ஷித் ஆகியோர் நடித்து இருந்த இந்த “தேவதாஸ்“ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் இந்தியாவின் அனைத்து மூளை முடுக்குகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இப்படி ஆரம்பித்த இவருடைய இசை பயணம் தற்போது 37 வயதை எட்ட இருக்கும் நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, துளு, பெங்காலி, போஜ்பூரி எனப் பல மொழிகளிலும் முன்னணி பாடகி எனும் நிலைக்கு உயர்ந்து உள்ளார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பால்ய நண்பர் சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “#Shreyaditya இந்த செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஷிலாதித்யாவும் நானும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால் உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு தேவை” எனப் பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவால் பாடகி ஸ்ரோயாவிற்கு பல பாலிவுட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் இசையமைப்பாளர் இமான் அவர்களும் ஸ்ரோயாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். தமிழில் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “முன்பே வா என் அன்பே வா” பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றார். மேலும் “பூக்களே சற்று ஓய்வெடுங்கள்“, “சொல்லிட்டாளே அவ காதல“, மெர்சல் படத்தில் “நீதானே நீதானே “ எனத் தொடர்ந்து தனது வசீகரக் குரலால் ரசிகர்கள் மத்தியில் பெரும் மலைப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pictures of Shreya Ghoshal. Collection by Shreya Ghoshal. 180. Pins. •. 859. followers. Random Images of Shreya Ghoshal. Shreya Ghoshal

Nikhila Vimal PhotoShoot Video