அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு

நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறைவாகவே ரிலீஸ் ஆனாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒவ்வொரு படமும் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அது மட்டுமின்றி ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்க உள்ளன என்பதும் எனவே இந்த ஆண்டே சிம்புவின் மேலும் மூன்று படங்கள் ரிலீஸாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு ஏற்கனவே நடித்து முடித்த திரைப்படம் ’மஹா’. ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தை ஜமீல் என்பவர் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகிய இந்த படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்பின் அவர் கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் கிட்டத்தட்ட நாயகன் போல் இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியை சிம்பு சமீபத்தில் முடித்துள்ளார் என்றும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Actress Sri Divya PhotoShoot Video