கொரோனா : சிம்பு ஆட்டம் போடும் மீம்ஸ் – தயாரிப்பாளர் பதில்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிம்பு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியதாக வதந்திகள் கிளம்பின. இதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி, சிம்பு சரியான நேரத்தில் வந்து தன் காட்சிகளை நடித்து கொடுக்கிறார் என்றும், அவர் இல்லாமல் ஹைதராபாத்தில் எப்படி ஷூட்டிங் நடக்கும் என்றும் கூறி வதந்திகளுக்கு பதிலளித்தார்.


இதையடுத்து தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக மாநாடு படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை விமர்சித்து நெட்டிசன் ஒருவர் நகைச்சுவையான மீம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கொரோனா அச்சத்தால் மாநாடு படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகர் சிம்பு மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடுவது போலவும், வருத்தத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அமர்ந்திருப்பது போன்றும் அந்த மீம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதைப்பகிர்ந்து பதிலளித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up -இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் எஸ்டிஆர் தான்.மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் ‘மாநாடு’ என்று கூறியுள்ளார்.