ரஜினி, அஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகரை இயக்கும் சிறுத்தை சிவா

தல அஜித் அவர்களை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா.

இவர் தற்போது முத்த முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி யை வைத்து, அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க போகிறாராம் சிறுத்தை சிவா. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிக்க இருக்கிறாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் சிறுத்தை சிவா கைகோர்க்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

Indian Flim Actress Keerthy Suresh PhotoShoot World