சிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என இந்த படத்தின் நாயகி நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் ’உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் குறிப்பாக நீங்கள் என்னை படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு மிகவும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கின்றேன்’ என்றும் அவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், கருணாகரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பதும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

sivakarthikeyan-and-rakul-tweets-about-ayalaan-movie

Gouri G.Kishan photoshoot Video