மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடத்தில் வெளிவந்த படம். இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து வந்த நம்ம வீட்டு பிள்ளை மெகா ஹிட் அடிக்க, சிவகார்த்திகேயன் மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார்.

ஆனால், வருட கடைசியில் வந்த ஹீரோ படம் மீண்டும் அவரின் மார்க்கெட்டை விழ வைத்துள்ளது, ஆம், ஹீரோ தற்போது வரை ரூ 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படமே ரூ 22 கோடி வசூல் வர, இவை தற்போது இதை எட்டிப்பிடிக்குமா? என்று நிலை உருவாகியுள்ளது.

படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தும் இப்படி ஒரு வசூல் கோலிவுட்டையே ஷாக் ஆக்கியுள்ளது.