முதல்முறையாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்-சிவகார்த்திகேயன்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும், இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும், இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு பக்கம் இயக்கத்தில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் படங்கள் தயாரிப்பதிலும் கார்த்திக் சுப்புராஜ் பிசியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருக்கும் நான்காவது திரைப்படத்தை ரத்தினம் பிரசாத் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Sivakarthikeyan-Siva-Karthick Subburaj,Karthik,Subburaj