யு டியூபிற்கும், சிவகார்த்திகேயனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர் டிவியில் தொகுப்பாளராக இருந்த காலத்தில் அவர் நிகழ்ச்சியில் யு டியூபில் இடம் பெற்று லட்சக் கணக்கான பார்வைகளைப் பெற்றது.

 

அதுவே, சிவகார்த்திகேயன் சினிமாவில் சரசரவென ஏறுவதற்கும் படிக்கட்டுகளாக அமைந்தது. அது சிவகார்த்திகேயன் மகள் வரைக்கும் தொடர்வதும் சிறப்பு.

யு டியுபில் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இரண்டு பாடல்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அதிக தொடர்பு உள்ளது.

‘கோலமாவு கோகிலா’ படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு…’ பாடல் இதுவரை 5 கோடியே 46 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் அவரது மகள் ஆராதனா பாடியுள்ள ‘வாயாடி பெத்த புள்ள…’ பாடல் 3 கோடியே 14 லட்சம் பாடல்களைக் கடந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவற்றிற்கு அடுத்து தற்போது ‘சீமராஜா’ படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஏற்கெனவே அரை கோடி பார்வைகளைக் கடந்து ஒரு கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.

சமீப காலத்தில் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்களாக சிவகார்த்திகேயன் பாடல்கள் இடம் பிடிப்பது மற்ற ஹீரோக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.