இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூரரைப்போற்று‘ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு ஹிப்ஹாப் ராப் பாடலான மாரா என்ற பாடல் குறித்த தகவல்களை சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார். மேலும் இந்தப் பாடலைப் பாடுபவர் குறித்த ஆச்சரியமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்தப் பாடலைப் பாடுபவர் சூர்யா தான் என்று சற்றுமுன் ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சான் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய நடிகர் சூர்யா, தற்போது மீண்டும் 5 வருடங்கள் கழித்து பாடகர் அவதாரம் எடுத்து இந்த மாரா என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் விரைவில் வெளிவர உள்ளது என்பதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

Suraya ,Gv prakash,Soorarai Pottru