சூரரைப்போற்று – வசனம் எழுதியவரை கண்டுகொள்ளாத படக்குழு

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில், ‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? ஃபிளைட்ட இறக்கு டா நான் பாத்துக்கறேன்’ உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் வசனத்தை எழுதிய இயக்குநர் விஜயகுமார் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘உறியடி’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான விஜய்குமார் தான் இந்தப் படத்தின் வசனங்களை எழுதியது.

Shilpa Manjunath | HQ PhotoShoot | Indian Film Actress