சூரரைப்போற்று படத்தின் அசத்தலான புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது.

இதனிடையே சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதை மறுத்துள்ளது. இந்நிலையில் படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் படத்தின் சில உரையாடல்களில் சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.

தணிக்கையில் ‘U’சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படம் 153 நிமிடங்கள் (2மணி நேரம் 33 நிமிடங்கள்) இருக்கும் என்றும் தெரிகிறது. கொரோனா பிரச்னை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Soorarai Pottru Censor,u certificate

In the early 2000s, Keerthy worked as a child actress in a few of her father’s productions, such as Pilots (2000), Achaneyanenikkishtam (2001) and Kuberan (2002) and some television serials. 11 years after Kuberan, she made her debut as a lead actress in Priyadarshan’s horror film Geethaanjali, in which she had a dual role. She was still studying during that time and shot for Geethanjali during her semester break.Reviews on the film and her performance were mixed, with Sify writing that she “does put in some effort but makes only a limited impression in a double role”,while Rediff wrote that she “has got a plum role but whether she impresses with her acting prowess is another matter”.In 2014, Keerthy had her next release Ring Master, directed by Rafi of Rafi Mecartin duo, in which she shared screen space with Dileep. She played the role of a blind girl,[15] which she said was much more challenging than her double role in Geethanjali. The film was a commercial success, being termed a “super hit” by Sify