சூரரைப் போற்று குறித்து ‘சூப்பர் அப்டேட்’ ஜி.வி.பிரகாஷ்!

                                                       ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 38-வது படமாக சூரரைப் போற்று திரைப்படம்    உருவாகி வருகிறது.                இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக ஜிவி பிரகாஷ் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் இணைந்து பாடிய ‘மண்ணுருண்ட’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதேபோல முதலில் வெளியான ‘வெய்யொன் சில்லி’ பாடலும் ரசிகர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் சற்றுமுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ” சூரரைப் போற்று படத்தின் 3-வது பாடல் இளவயதினருக்கு ஏற்றாற்போல நகைச்சுவையுடன், வேடிக்கையும் கலந்து இருக்கும். பாடகர் மற்றும் அது என்ன பாடல்? என்பதை கண்டுபிடியுங்கள். இன்னும் சில நாட்களில் பாடல் வெளியாகும்,” என தெரிவித்து இருக்கிறார்.

G.v.Prakash Kumar