சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.

Madurai Ajith Fans,Ajith Vijay,

இதையடுத்து மதுரை அஜித் ரசிகர்கள், அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது அதிகம் காத்திருப்பது தீபாவளி பண்டிகைக்காகத்தான். அன்று தான் தளபதியின் பிகில் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.

சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக விபத்தில் இறந்த நிலையில், தன்னுடைய பட ரிலீசுக்கு எந்த பேனரும் வைக்கக்கூடாது என விஜய் கூறியுள்ளார். பேனர் வைக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

பேனர் கலாச்சாரத்தை நிறுத்தவேண்டும் என நடிகர் சூர்யாவும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் சுபஸ்ரீயின் குடும்பத்தை நேரடியாக வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.