இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில், சூர்யாவுடன் நடிக்கவுள்ள முன்னணி நடிகர்

இயக்குனர் சுதா கொங்கரா இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்து அசத்தியிருந்தனர்.

அதன்பின் நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் வரும் 12 ஆம் தேதி வெளியாகிவுள்ளது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், சுதா கொங்கரா உள்ளிட்டோரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சூர்யா, மாதவன் இருவரையும் ஒன்றாக வைத்து இயக்க வாய்ப்பிருக்கிறதா? என சுதா கொங்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுதா கொங்கரா “இருவரையும் இயக்க அவளோடு இருக்கிறேன், கிரேட் ஐடியா. ஆனால் ஸ்கிரிப்ட் மாட்டனுமே” என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து சிரித்தபடியே ‘எழுதுங்க எழுதுங்க’ என சூர்யாவும், ‘யெஸ்,யெஸ்.. எழுதுங்க’ என மாதவனும் மாதவனும் ட்விட் செய்திருந்தார்.

Suriya Soorarai Pottru Sudha Kongara

Actress Amyra Dastur | HQ PhotoShoot