சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ தல 61 ‘

சூரரை போற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா, தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க போகிறார் என்று பல தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின.

ஆனால் தளபதி விஜய்யின் கால்சீட் கிடைக்காததால், அதே கதையில் சிறு திருத்தங்கள் செய்து, சுதா கொங்கரா, தல அஜித்தை வைத்து இப்படத்தை இயக்க போகிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு நடிக்கவுள்ள ‘ தல 61 ‘ படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படம் மிஷின் இம்ப்பாஸிபிள் படத்தை போல் மிகவும் விறுவிறுப்பாகவும், நெறைய சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திர்ல்லர் படமாக இருக்கும் என படத்தின் கதை கசிந்துள்ளது.

மேலும் இப்படத்தை ‘ விஸ்வாசம் ‘ படத்தை தயாரித்து சத்ய ஜோதி பிலிம்ஸ் அல்லது கோகுலம் ஸ்டுடியோஸ், இந்த இரு நிறுவங்கள் தான் தயாரிக்கும் என கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி, வலிமை படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் துவங்கி தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டு, உடனடியாக அடுத்த மாதத்தில், பிப்ரவரியில் இருந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக இறங்கு உள்ளாராம் தல அஜித்.

பொறுத்திருந்து பார்ப்போம் , இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று..