சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் தமிழில் வெளியாகும் முன்னரே இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ’சூரரைப்போற்று’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குணீத் மோங்கா, இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் உள்பட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் சூரரைப்போற்று ஹிந்தி படத்தின் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படம் தெலுங்கில் ’ஆகாஷமே நீ ஹதுரா’ என்ற தலைப்பில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் சூரரைப்போற்று திரைப்படம் வெகுவிரைவில் இந்தியிலும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது