ஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த தமிழ் படம்

ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகளை திறக்க அனுமதி கேட்டு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனிடையே ரிலீசுக்கு தயாராகி இருந்த படங்களை ஓடிடி தளங்கள் கைப்பற்றி வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படமும் ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது.

அதேபோல் இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள அந்தகாரம் திரைப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

titanic Anitha

இந்நிலையில் நடிகர் கலையரசன், ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் டைட்டானிக் ; காதலும் கவுந்து போகும்திரைப்படத்தையும் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சிவிகுமார் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.