தல 61 குறித்து வெளியான தகவல்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.

இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகரான கார்த்திகேயா என்பவர் நடித்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.

கொரோனா காரணமாக தள்ளிப்போய் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் தன் 61வது படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இது உண்மையான செய்தி இல்லை இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தற்போது தெரியவந்துள்ளது.