முதல்முறையாக வலிமை திரைப்படம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த வந்த திரைப்படம் வலிமை, இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை வலிமை திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, வலிமை திரைப்படம் குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் “தல அஜித் போலீஸாக நடித்துள்ள வலிமை திரைப்படம் செம்ம மாஸ்ஸாக இருக்கும்” என கூறியுள்ளார். மேலும் வலிமை திரைப்படத்தை செம மாஸ்ஸாக உருவாகியுள்ளதாகவும், சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Charming Actress Rashmika Mandanna PhotoShoot World