உணவு பொருளில் தல அஜித்தை வைத்து ரசிகர் செய்த விஷயம், ஆச்சிரியத்தில் மூழ்க வைத்த வீடியோ

தல அஜித் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நட்சத்திரம். இவர் தனது கடின உழைப்பினால் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 70% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.

மேலும் இப்படத்தில் இவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார் என்றும் நம்பக தன்மையான ஒரு தகவல்கள் வெளிவந்திருந்தது.

தல அஜித்தை பற்றி அவரது ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் எதாவது விஷயங்களை செய்து கொன்டே தான் இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது தல அஜித்தின் வெறித்தமான ரசிகர் ஒருவர் உணவு பொருளான கிரீம் பிஸ்கெட்டுகளில் அஜித்தின் முகத்தை வரைந்து காட்டியுள்ளார்.