அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். இவரது படங்கள் கடந்த சில வருடங்களாக பாக்ஸ் ஆபிஸில் அதிகம் சாதனை படைத்து வருகிறது.

billa thala image

இந்த வருடம் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களே உதாரணம். இப்போது அவர் வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதில் பிஸியாக இருக்கிறார்.

படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லை, ஆனால் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்று பெரிதாக உள்ளது. ஏனெனில் அவரது நடிப்பில் தமிழ் சினிமாவே வியந்து பார்த்த பில்லா படம் வெளியான நாள்.

இன்றோடு படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் #12YrsOfSovereignBILLA என டிரண்டிங்கில் இறங்கியுள்ளனர். படம் உருவான விதம், கதை, பின்னணி இசை, அஜித் ஸ்டைல், மாஸ் வசனங்கள் என ஒட்டுமொத்தமாக கொண்டாடும் அளவிற்கு படம் இருந்தது.

தங்களுக்கு படத்தில் பிடித்ததை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்கள் தல ரசிகர்கள்.