இளைய தளபதி விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கர்நாடகாவில் நடந்தது. தற்போது படக்குழுவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, ஜனவரி 2ம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. இதில் விஜய் மட்டும் இடம்பெறும் லுக் தான் வெளியாக இருக்கிறதாம்.

இரண்டாவது லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இடம்பெறும் போஸ்டர் வெளியாகும் என்கின்றனர்.