விஜய்-முருகதாஸ் இணையும் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாக வேண்டியது.

ஆனால் கொரோனா காரணமாக படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் படக்குழு அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவரது 65வது படத்தை முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குகிறார்.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது என்ன விஷயம் என்றால் விஜய்யின் 65வது படத்திற்கு ரூ. 130 கோடி பட்ஜெட் என்று கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.