விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் வரலாறு தான்- எஸ்.ஏ.சியின் பரபரப்பு பேட்டி

இளைய தளபதி அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு இப்போது இல்லை பல வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யும் பேசுபவர்கள் பேசட்டும் நாம் நம் வேலையை கவனிப்போம் என படங்கள் நடித்து வருகிறார்.

இதற்கு நடுவில் தான் விஜய்யின் அப்பா அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார், உடனே செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நொடியே விஜய் அப்பா கட்சிக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.

தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், விஜய்க்கு நான் எப்போதும் நல்லது தான் செய்வேன், இப்போது நான் செய்துள்ள விஷயத்தை பற்றி விஜய் பின்னால் புரிந்து கொள்வார்.

எனது கட்சியில் விஜய்யின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும், அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே என்று பேசியுள்ளார்.

Dhivyadharshini HQ PhotoShoot | DD | Television Anchor