விஜய்யின் ஃபஸ்ட் லுக்கையே அஜித் தான் முதலில் பார்த்தாராம்- இயக்குனரே வெளியிட்ட தகவல்

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிக்கும் படங்கள் பெரிய போராட்டத்திற்கு பிறகே திரையரங்குகளில் வெளியாகின்றன.

அப்படி பெரிய பிரச்சனையை சந்தித்த படம் தலைவா. ஏ.எல். விஜய் இயக்க விஜய் நடித்த இப்படம் வெளியாகாது என்ற அளவிற்கு பிரச்சனைகள் எழுந்தன.

பின் படக்குழுவினர் பல பேச்சு வார்த்தைகள் நடத்தி படத்தை ரிலீஸ் செய்தார்கள். இப்போது இப்படம் குறித்து ஒரு சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

ஒரு பேட்டியில் அவர், இந்த பட ஃபஸ்ட் லுக்கை முதலில் பார்த்ததே அஜித் அவர்கள் தான். அதோடு வாங்கண்ணா வணக்கம்மா என்ற பாடலை கூட அவர் தான் முதலில் கேட்டார் என்று கூறியுள்ளார்.

Nazriya Nazim Photoshoot Video