தளபதி விஜய்யின் டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா, இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனை….

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு மகேஷ்பாபு விட்ட சவாலை தளபதி நிறைவேற்றினார்.

அந்த டுவிட் தற்போது வரை ஒரு லட்சம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர், இது மட்டுமின்றி விஜய்யின் பல டுவிட் ஒரு லட்சம் தாண்டியுள்ளது, இந்த சாதனையை தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகர்களும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mahesh Babu,Vijay,Vijay Tweet