விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் மாஸ்டர்.

படத்திற்காக படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா தற்போது சென்னை என மாற்றி மாற்றி நடந்து வருகிறது. கடைசியாக கர்நாடகாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்போது சென்னையில் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு படப்பிடிப்பு நடக்கிறது. தற்போது வரும் தகவல் என்னவென்றால் வரும் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வரும் என்கிறார்கள்.

ஆனால் இந்த தகவல் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை.