அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் இரு பாடல்களை தொடர்ந்து மூன்றாவது பாடலாக தீமுகன் தீம் மியுசிக் இன்று மாலையில் வெளியானது.

Bigil,Nerkonda Parvai

இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் அஜித் ரசிகர்களாக தான் தென்படுகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொண்டனர்.

ஆனால் தங்களது ரசிகர்களையும் குஷியாக்க பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியுசிக் நிறுவனம் அஜித்தின் தீமுகன் பாடல் வெளியாகியிருந்த நேரத்தில், பிகில் போடலாமா? என ரசிகர்களிடம் கேட்டிருந்தது.

இதனால் மறுபடியும் தளபதி ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் பிகில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்காக சிங்கப்பெண்ணே பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரம் பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.

Bigil