மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக பொருட் செலவில் படத்தை இயக்கியவரும் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே எஞ்சியுள்ள திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஷால், இத்தகவல் உண்மைதான் என்று கூறியுள்ளார். படத்திலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேட்டியளித்திருக்கும் மிஷ்கின், “துப்பறிவாளன் 2 படத்துக்காக ரூ.40 கோடி கேட்கவில்லை. ரூ.400 கோடி கேட்டேன். 50 சதவிகித படப்பிடிப்பை ரூ.100 கோடியில் முடித்திருக்கிறேன். மீதமிருக்கும் படப்பிடிப்பை முடிக்க ரூ.100 கோடி தேவைப்படுகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிப்பது போல் காட்சிகளை அமைக்க திட்டமிட்டிருந்தேன். அதற்கு மட்டும் ரூ.100 கோடி செலவாகும். எனவே மொத்தம் விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டன் என தனது பாணியில் கிண்டலாக பதிலளித்தார்.