தல அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்கி வர, யுவன் இசையமைத்து வருகின்றார்.

மேலும், நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இதையும் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கு சிறு அடிப்பட்டு ஓய்வில் இருந்து வருகின்றார், அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் தல அஜித்திற்காக ஸ்பெஷலாக ஒரு பைக் ஏற்பாடு செய்துள்ளார்களாம், அதோடு 5 பைக் படத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாம்.

இதன் மொத்த விலை மட்டும் ரூ 90 லட்சமாம், இதை வைத்து செம்ம ஆக்‌ஷன் காட்சிகள் ஒன்றை எடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.

இதில், அஜித் தவிர, வேறு யார் நடிக்கின்றார்கள், என்ற விவரம் வரும் நாட்களில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.