இதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்! திருமண ரகசியம் இதோ

நயன்தாரா தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நீண்ட வருடங்களாக காதலில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் திருமணம் எப்போது என்பது தான் பலருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு.

ஆனால் அண்மைகாலமாக இருவரும் கோவில் கோவிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மசூதிகளுக்கும் சென்று வந்தார்கள்.

இருவரும் இணைந்திருக்குமாறு பல புகைப்படங்க

ளையும் வெளியிட்டார்கள். அதே வேளையில் இவர்களின் திருமணம் தற்போது கொரோனாவால் தள்ளிப்போயுள்ளது.

நயன்தாராவுக்கு ஜோதிடம், ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டாம். கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரின் ஆலோசனை படி தான் திருமணம் குறித்த விசயங்களை பின்பற்றி வருகிறாராம்.

இதில் ராகு கிரக தலமான திருநாகேஸ்வரம் செல்ல வேண்டியுள்ளதாம். தற்போது கொரோனாவால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற காரணத்தால் அக்கோவிலுக்கு செல்லமுடியாமல் இருக்கிறாராம். இதனாலேயே திருமண அறிவிப்பை வெளியிட தாமதமாகி வருகிறதாம்.