பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் மோதுகின்றன. இரண்டு படங்களின் முன்பதிவு தற்போது துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

bigil,Sr prabu,kaithi

பிகில் படத்தின் டிக்கெட்டுகளை மிக விரைவில் விற்று தீர்ந்து வருகின்றன. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தியேட்டர் கவுன்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அப்படி ஒரு விஜய் ரசிகர் ஆன்லைனில் பிகில் பட டிக்கெட் புக் செய்வதற்கு பதில் தவறுதலாக கைதி படத்தின் டிக்கெட்டை புக் செய்துவிட்டாராம்.

என்ன செய்வதென்று தெரியவில்லை என அவர் கைதி பட தயாரிப்பாளரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார். அதை பார்த்த எஸ்.ஆர்.பிரபு “தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போல” என கலாய்த்துள்ளார்.