நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் விஜய் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இதில் ரொக்கமாக விஜய்யிடம் எந்த பணமும் இல்லை என்று கூறினர், அதை தொடர்ந்து விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என விஜய், அன்புசெழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனால், இவர்கள் நேரில் ஆஜராகுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பிரான்க் கால் தீனா கலந்துகொண்டார். அதில் பேசும்போது அவர், விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் தளபதியுடன் காம்பினேஷன் காட்சிகள் உள்ளது.

அவர் என்னை முதலில் பார்த்ததும் அது நீதானே என்றார், நான் கைதி படத்தில் காமாட்சி நான் தான் என்றேன். ஆனால் தளபதி அது இல்லை பிரான்க் கால் செய்வது நீதானே என்றார்.

ஆமாம் என்று என்னுடைய சிறந்த எபிசோட்களை காட்டினேன். உடனே அவர் எனக்கும் நிறைய பேருக்கு பிரான்க் கால் செய்ய வேண்டும் என்று கூறினார். பட ரிலீஸுக்கு பிறகு நிறைய விஷயங்கள் கூறிகிறேன் என தீனா பேசியுள்ளார்.