நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பது நமக்கு நேற்றே கிடைத்த தகவல்.

முதலில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்தது. பின் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த விஜய்யிடம் வருமான வரித்துரையினர் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர்கள் விசாரனைக்கு பின்பும் விஜய்யை சென்னை அழைத்து வந்தனர்.

அவரது வீடு, பங்களா என எல்லா இடங்களிலும் சோதனை நடத்தி அதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விஜய்யிடம் விசாரணை இரவு நடந்துள்ளது.

இன்றும் விஜய்யின் பனையூர் பங்களாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அவரது வீட்டில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக கூறி காவல் துறையினரின் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.