‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்விஜய் சேதுபதி நடிக்கும்  “லாபம்” படத்தை  இயக்கி வருகிறார்.

Vijaysethupathy,Dhansika

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘லாபம்’ .மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்து  ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது அதிரடி ஆகஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மேலும் கபாலி, பேராண்மை படங்களில்  நடித்த சாய் முக்கிய வேடங்களில் தன்ஷிகா நடித்துள்ளார்.

‘லாபம்’ திரைப்படத்தை தவிர ‘மாமனிதன்’, இயக்குநர் விஜய் சந்திரின் படம் என விஜய் சேதுபதி பிசியாக இருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசனும் ‘சிங்கம் 3’ படத்திற்கு பின் சிறிய இடைவெளிவிட்டு ‘லாபம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.