நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ரஜினிக்கு அடுத்து விஜய் தான் “சூப்பர்ஸ்டார்” எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

siman vijay simbu

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு முதலீடு வராது எனவும், அதற்கு மாறாக இவர்களின் நிதியை வேண்டுமானால் அங்கு முதலீடு செய்யலாம் என்றார். மேலும் முதலமைச்சர் கோட் சூட் அணிந்து சென்றதை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சீமான் குறிப்பிட்டார்

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் இருப்பதாகவும், அவர் தான் அடுத்த “சூப்பர்ஸ்டார்” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் விஜய் போன்று அசாத்திய திறமை உள்ளவர் சிம்பு என்று கூறிய சீமான், குறைகளை சரிசெய்து அவரை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அழைத்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகர், அண்மையில் கடிதம் எழுதிய நிலையில், தற்போது சீமானும் அதனை வழிமொழிந்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை த்ரிஷா, அஜித் சூப்பர் ஸ்டார் என புகழாரம் சூட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி மீண்டும் வலம் வரத் தொடங்கியுள்ளது.