பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் கேரியரில் இந்த கேரக்டர் தான் பெஸ்ட் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Rayappan Bigil ,thalapthy vijay

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியானது. இந்த திரைப்படத்தின் சிறப்புகாட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி வழங்கியது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அதிகாலை முதல் திரையரங்கில் காத்திருந்து படம் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிகில் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய் – அட்லீ வெற்றிப்பயணத்தில் இந்த படமும் ஒன்று என்று தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆக்ஷன், காமெடி என நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ள நிலையில் படத்தில் ராயப்பன் கேரக்டர் அனைவரும் நெஞ்சில் குடி கொண்டுள்ளது.
படத்தில் டிரெய்லர் வெளியானதிலிருந்தே ராயப்பன் கேரக்டரில் வரும் விஜய் சொல்லும் பிகிலு என்ற வாசனம் பட்டிதொட்டி முழுவதும் சென்றடைந்தது. சென்டிமென்ட், ஆக்ஷன் என ராயப்பன் கேரக்டரில் விஜய்  வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.