அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் தயாரிப்புக்கு ஆன செலவுகள் பல கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட 3 போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.

இந்நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் தயாரிப்பு செலவுகள் சுமார் ரூ.140 கோடியை தாண்டியதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய், இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் என மூவருக்குமே இந்த படம் பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை வாங்கிய ஸ்க்ரீன் சீன் நிறுவனமும் தங்களது விநியோக விதிமுறைகளை தாண்டி அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இது கடந்த 2010ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘எந்திரன்’ மற்றும் 2015ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த‘பாகுபலி’ திரைப்படங்களின் தயாரிப்பு செலவை விட அதிகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் 20 நாட்கள் பிகில் படத்தின் ஷூட்டிங் பாக்கியிருப்பதாகவும், அதன் பிறகே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.