விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஹீரோ பின் நடிக்கும் நடிகராக நடித்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர்.

இவரது பாதையில் பல கஷ்டங்கள் இருந்தும் ஜெயித்து இந்த நிலையில் உள்ளார். இப்போது இவர் தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தியில் அமீர்கான் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அண்மையில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், மாலிவுட் பிரபலங்கள் சிலர் கலந்துகொள்ள பேட்டி ஒன்று எடுத்தனர். அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி கூறியுள்ளார்.

சிவாஜி கணேசன் எல்லா வேடத்திலும் அருமையாக நடிக்க கூடியவர், கமல்ஹாசன் திறமையான நடிகர், மோகன்லால் ஈஸியாக நடிப்பார், எம்.ஜி.ஆர் கதை தேர்வு, நடிப்பு பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார்.